பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 37
 
இனவியல்.

249  

எந்தை 1யுடைப்பெயர்க் கெதுகை சாற்றி
யந்தமி லின்பம் பொருளா 2வேத்திப்
பொருளு மறனும் 3வீடும் பழித்து
மடன்மா வேறுதன் மாதர்க் குரித்தே.
 

(78)

10-மறம்.

250  

 

பெருநில வேந்தன் மகட்பால் 4வேண்டி
யொருபெருந் தூத னுரைத்தமொழி கேட்டுக்
குறுநில மறவன் 5வெஞ்சினந் திருகி
6மாற்றமிக வுரைப்பது மறமென மொழிப.7
 

(79)

11-பல்சந்தமாலை.

251

சொன்ன கலம்பக வுறுப்புவகை நீக்கி
மன்னிய பத்து முதனூ றளவா
வந்த மரபின் வரூஉஞ்செய்யுண் முதலா
வந்தது பல்சந்த மாலை யாகும்.8
 

(80)

12-இணைமணிமாலை.

252  

இணைமணி மாலை தணிவிலந் தாதியாய்
மறையவர் பாவும் வணிகர்தம் பாவின்
றுறையு மியைந்தீ ரைம்பது வருமே.
 

(81)


     [பி-ம்.] 1 யுடையபெயர்க். 2 வேற்றி. 3 வீடு மழித்து. 4 வேண்ட, வொருபெருந். 5 வெஞ்சின வஞ்சின, மறமிக மொழிவது. 6 மாற்றமென.
     7 இதற்குப் பின் சேர்த்துக்கொள்ளுமாறு,
 
  ‘கூடாக் குலமுதன் மன்னன் மகள்வேண்டத்
தாதையுந் தாயுந் தன்னைய ரனைவரு
மாறுசொன் மகட்பாற் காஞ்சியு மறனே’.
 

(62)

     என ஒரு சூத்திரம் தனியே யெழுதப்பட்டுள்ளது. [ச-பி.]
     8 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,

  ‘உறுப்பி னீக்கிய பலவகைச் சந்த
மிறுத்த வகைய தியற்பல சந்தம்’.
 

(64)

என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்