பக்கம் எண்: தேடுக
பக்கம் : 38 பன்னிருபாட்டியல்
 
பன்னிரு பாட்டியல்

253  

வெண்பாக் கலித்துறை யீரிரண் டியைந்த
வொண்பா நூறவை யிணைமணி மாலை.*

 

(82)

13-இரட்டைமணிமாலை.

254  

 

வெண்பா முதலாக் கலித்துறை பின்வரு
மிந்த விருப திரட்டைமணி மாலை.
 

(83)

 

255

ஆதியந்தம் வெண்பாக் கலித்துறை
1யேதமின்றி வருவ திரட்டைமணி மாலை
2யதுவே நாலைந் தியலு மென்ப.
 

(84)

14-மும்மணிமாலை.

256  

மிகுத்த வௌ¢ளை கலித்துறை யகவல்
விருத்த மும்மணி 3விளம்புமந் தாதி4.
 

(85)

15-நான்மணிமாலை.

257

 5வெண்பாக் கலித்துறை யகவல் விருத்தம்†
நண்பாய் வருவது நான்மணி மாலை.
 

(86)

258

 அகவலு மகவல் விருத்தமு நாற்ப
தகவலை முன்வைத் தறைவது கடனே.‡
 

(87)


     *வெண்பாவகவ லிணைமணிமாலையுங் கொள்வர் இலக்கணவிளக்கப் பாட்டியலார்.
     [பி-ம்.] 1யேதமின் றியல்வ. 2அதுவே, நாலைந் தியலுமென்மனார் புலவர். 3‘மாலையந் தாதி.
4இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு,
  ‘வெண்பாக் கலித்துறை யகவல் விருத்தம்
வண்பா மூன்றவை மும்மணி மாலை’.
 
 

(68)

  ‘வௌ¢ளை கலித்துறை யகவல் விருத்தங்
கொள்வ மும்மணி கோத்தவந் தாதி’.
 

(69)

     என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன.

  5 ‘வெண்பா முன்வரக் கலித்துறை யகவல்
விருத்த நண்பாய் வருவது நான்மணி
மாலை யென்று வகுத்துரைத் தனரே’. [ச-பி.]

     † வெண்பாக் கலித்துறை விருத்தம் அகவல் எனத் தொடுப்பர் பிற்காலத்தர்.
     ‡ இது நான்மணிமாலைக்குப் பொருந்தாதிருக்கிறது.

   
முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்