பக்கம் எண்: தேடுக
பன்னிருபாட்டியல் பக்கம் : 39
 
இனவியல்

259  

வௌ¢ளை கலித்துறை யகவல் விருத்தங்
கொள்வது நான்மணி கோத்தவந் தாதி.1

 

(88)

16-கலம்பகமாலை.

260  

 

2ஒருபோ குடனே யம்மனை நீக்கி
வௌ¢ளை முதலா வெல்லா வுறுப்புந்
தள்ளா வியலது கலம்பக மாலை.3
 

(89)

261  

ஒருபோ கம்மனை யொழித்துவெண் பாமுதற்
கருதிற் பேரது கலம்பக மாலை.
 
 

(90)

17-மும்மணிக்கோவை.

262  

4வௌ¢ளையு மகவலு நேரிசை யாகக்
கலித்துறை வரவந் தாதி யாகி
முறைமையி னியல்வது மும்மணிக் கோவை.
 

(91)

263  

தோன்றிய வகவல் வௌ¢ளை கலித்துறை
மூன்றும் வருவது மும்மணிக் கோவை.*

 
 

(92)

264  

மும்மூன் றொருபொருண் மிசைவரு மென்ப.
 

(93)


     [பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி,
  ‘வெண்பா வகவல் கலியே வஞ்சியெனு
நன்பா நூறவை நான்மணி மாலை’.
 

(70)

  ‘அதுவே யந்தாதி யாக வருமே’.
 

(71)

     என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. [ச-பி.]
     2 ஒருபோ குடனம் மனைநனி நீக்கி. [ச-பி.]
     3 இதற்குப்பின் சேர்த்துக் கொள்ளும்படி,

  ‘அந்த மாதி யாகியுங் கலம்பகம்
வந்த செய்யுளள வாகினும் வருமே’.
 

(73)

     என ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.]

  4 ‘அகவலும் வௌ¢ளையு நேரிசை யாகக்
கலித்துறை வரவந்த மாதி முறைமையி
னியல்வது மும்மணிக் கோவை யாகும்’. [ச-பி.]

     *இதற்கும் அளவு முப்பது. இஃது ஆசிரியம் வெண்பாக் கலித் துறையாக வருமெனவும், மும்மணிமாலை வெண்பாக் கலித்துறை ஆசிரிய விருத்தமாக வருமெனவும் கொள்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்