பக்கம் எண்: தேடுக
பக்கம் : 40 பன்னிருபாட்டியல்
 
பன்னிருபாட்டியல்

18-கலியந்தாதி

265  

வல்லின மெல்லின மிடையின 1வெழுத்துப்
புல்லி மருங்கு போகா தொன்றிக்
குறிலெனிற் குறிலே நெடிலெனி னெடிலே
2பொருந்தி நாற்கலை 3கொண்டோ ரடியாய்த்
திருந்து மிவ்வகை நான்கடி யாகியு
மோரொலி யாகியு மெண்ணான் காகிய
4கலையொடு பொருந்தியுங் குறிலு நெடிலு
முறைமுதல் வரினு மவ்வெழுத் தாகியு
மிப்பரி சியன்ற முப்பது கட்டளை
மிக்கது கலியந் தாதி யாகும்.
 

(94)

266  

5வெண்கலி யுஞ்சில சிறுபான்மை வருமே.
 

(95)

19-ஒலியந்தாதி.

267  

தத்த மினத்தி லொப்புமுறை பிறழாது
நாலடி யீரெண் கலையொரு முப்பது
கோலிய தொலியந் தாதி யாகும்.
 

(96)

268  

ஈரொலி 6யாகிய வெண்ணான்கு கலையெனச்
சீரியற் புலவர் 7செப்பினர் கொளலே.
 

(97)

269  

வண்ணக மென்ப தொலியெனப் படுமே.
 

(98)

20-யானைத்தொழில்.

270  

மூவகை நிலனு மூவகை நிறைவும்
பல்வகைத் தேயமு மெழுவகை யுறுப்பும்
வருணமும் யாண்டு மைவகைக் கொலையும்
 

 


         [பி-ம்.] 1 வொற்றுப். 2 பொருந்து. 3 கொண்டதோ ரடியாய்த்.
  4 ‘கலையொடு பொருந்தியுங் குறிலுங் குறிலு
நெடிலு நெடிலு மிம்முறை முதல்வர
அவ்வெழுத் தாகியு மிப்பரி சியன்ற
முப்பது கட்டளை கலியந் தாதி
யாகும் பெயரென் றறையல் வேண்டும்’. [ச-பி.]
5 ‘வெண்கலி யுஞ்சிறு பான்மைசில் லிடத்துள’.
6 யாகி யெண்ணான்கு. 7 செப்பின ரென்ப. [ச-பி.]

 

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்