|
இனவியல் |
|
|
மிருவகை நடையு மைவகை யுணர்வு
முடையோர்ப் பேணலு முளப்படப் பிறவு
நண்ணிய வேளாண் பாவி னலம்பெற
வெண்ணி யுரைப்ப தியானைத் தொழிலே. |
|
|
(99) |
|
271 |
1கிரிசரம் வனசர நதிசர மென்றிவை
நிலைபெறு நிலனென நிறுத்திசி னோரே. |
|
|
(100) |
|
272 |
உயரமு நீளமுஞ் சுற்று மளவினிற்
குறையா தியல்வது நிறைவெனப் படுமே. |
| |
(101) |
|
273 |
பல்வகைத் தேயங் கொல்களிறு பிறக்கும்
பல்வகைத் தேயமு மென்மனார் புலவர். |
| |
(102) |
|
274 |
பாத நாலுங் கையும்வா லதியுங்
கோசமு நிலனுறத் தீண்டுதல் குறியே. |
| |
(103) |
|
275 |
குலமெனப் படுவது பலவகை வருணமு
நலனுற வுரைக்கு நலத்த தென்ப. |
| |
(104) |
|
276 |
நலமிகு வாழ்நாள் பொலிவுற வியம்புதல்
யாண்டென மொழிப வியனெறிப் புலவர்.2 |
| |
(105) |
|
277 |
கையுமுற் கூறுங் கடியபிற் கூறுங்
கூர்ங்கோ டிரண்டுங் கொலைத்தொகை வகையே. |
| |
(106) |
|
278 |
முன்ன ரூன்றிய காற்குறி தன்னிற்
பின்னர்ப்பத மிடுவது தோரண மென்ப. |
| |
(107) |
|
279 |
பிறழ விடுவது வக்கிர மதுவே
சாரிகை விகற்பமு மாகு மென்ப. |
| |
(108) |
|
280 |
நன்மை யியற்றலுந் தீமை யியற்றலும்
பற்றிய நன்மை தீமை நினைத்தலுங்
கயக்கறு கால நினைத்தலும் புலனே. |
| |
(109) |
|
|
|
என ஒரு சூத்திரம் தனியே
எழுதப்பட்டுளது. [ச-பி.]