சிறுபான்மையே உளதெனவும் தம் கருத்துச் சென்றாங்குச் சென்று உரைத்தார். அவர் கூறியவாறு சிறிதுவேறுபாடு இருப்பினும் முதல் நூலுக்குச் சிறிதும் வேறுபாடின்றிக் கூறலே வழிநூல் இலக்கணம் ஆகலின், ஐந்திரம்முதல் நூலும் தொல்காப்பியம் வழிநூலும் அதற்கு ஏலாமையானும், ஐந்திரத்தின் வழித்தாகத் தொல்காப்பியம் செய்யப்படின் ஐந்திரத்துள்ளன முழுதும் கூறாவிடினும் அதற்கு மாறின்றியேனும் இருத்தல்வேண்டும்; அவ்வாறு இன்று என்பது எழுத்து அதிகாரத்துள் வடமொழி எழுத்துப் பல இன்றி அவ்வட எழுத்துள் இல்லாதனவாகிய ற ன ழ எ ஒ என்பனவும் சார்பெழுத்து மூன்றும் என எட்டு எழுத்தொடு முப்பத்து மூன்றே எழுத்து என்பதும் குறில் நெடில் முதலாகப் பல காரணக்குறியும் பிறவும் கூறுமாற்றான் அறியப்படலானும், அவ்வாறே சொல்லினும் பொருளினும் பல இருத்தலானும், வேற்றுமை முதலாய சில ஒத்திருத்தலின் அதுவும் முதல் நூலாம் எனின், அங்ஙனம் பல இவ்இருமொழிக்கே அன்றி ஏனைய மொழிக்கும் ஒத்தலின் பொது இயல்பாதலே அன்றி முதல் எனப் படாமையானும், முந்துநூல் நிறைந்த தொல்காப்பியன் ஐந்திரம் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்தோன் எனக் கூறாமல், ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் முந்துநூல் கண்டு தொகுத்தோன் என்றமையானே, ஐந்திரம் முதல்நூலாகாது என விளங்குதலானும், அகத்தியத்தை அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் என முன்னோர் கூறினாரன்றி வழிநூல் என்னாமையானும், அகத்தியன் இறைவன் அருள் பெற்று அந்நூல் செய்தான் என்றாரன்றிப் பாணினீயம் கண்டு செய்தான் எனக் கூறாமையானும், அகத்தியம் தலைச் சங்கம் இரீஇய முதல் ஊழி நூல் ஆதலின் கடைச்சங்கம் தோன்றிய பிற்காலத்துக் கலியுகத் தொடக்கத்துச் செய்யப்பட்ட பாணினீயத்தின் வழிவந்தது எனல் கால மலைவு ஆகலானும், பெயரது விகாரம் என்று ஓதிய புலவனும் உளனென அகத்தியத்துள் கூறியது பிருகற்பதி முதலாய வானுலகத்துப் புலவரை அன்றி அகத்தியம் தொல் காப்பியம் முதலாயின தோன்றிய காலத்திற்கு நெடுங்காலத்தின் பின்னர் அவதரித்த நில உலகத்துப் புலவராகிய பாணினி முனிவரைக் குறியாமையானும் அவர் கூற்றுப் பொருந்தாது என்பது. இனித் தொல்காப்பியம் முந்துநூலையும் ஐந்திரத்தையும் முதல் நூலாக உடைமையின், ஐந்திரத்தில் சிறிது வேறுபடலும் அமையும் எனச் சிலர் கூறுப. அங்ஙனமாயின் ஐந்திரமும் முந்து நூலும் கண்டு |