“திறனல்ல யாங்கழற யாரை 1நகுமிம் மகனல்லான் பெற்ற மகன்.” (கலி-86) என்பதுமது. அங்ஙனம் மகன். சிரித்தவழித் தாய்க்கு நகை தோன்றிற்றேல் அது பிறரிளமை பொருளாக நகை தோன்றிற்றாம். 2”நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்.” (அகம்-16) என்பது, பிறரிளமை பொருளாக நகைபிறந்தது. “நகைநீ கேளாய் தோழி.” (அகம்-248) என்பது, 3தன் பேதைமை பொருளாக நகை பிறந்தது. என்னை? தான் செய்த தவற்றிற்குத் தாய் தன்னை வெகுண்டது தனக்கு நகையாகக் கொண்டமையின். “நகையா கின்றே தோழி... மம்மர் நெஞ்சினன் 4றொழுதுநின் றதுவே.” (அகம்-56) என்பது, பிறன் பேதைமை பொருளாக நக்கது. 5”நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே.” (குறு-168) என்பது, தன்மடத்தான் நகை தோன்றிற்று; என்னை? நீயிர் கூறியதனையே மெய்யெனக் கொண்டு மகிழ்ந்து நக்கனமென்றமையின். 6”குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்.” (குற-1095) என்பதும் அது.
1. நகும் என்றது தன் மகனை. தன் மகன் தன்னியல்பானே நக அதனைத் தன்னை நகுதலாகக்கொண்டு தலைவி யாரை நகும் என்றாள். 2. பிறரிளமை பொருளாக நகை தோன்றியதென்றது குழவியின் நாவொடு பழகாத இளைய மழலைத் தீஞ்சொற்கேட்டு நகை தோன்றிற்று என்றபடி. 3. தான் செய்த தவற்றை ஓராமை பேதைமை என்க. 4. தொழுதுநின்ற பேதைமை கருதி நகையாகின்று என்றாள். இது தோழி கூற்று. பிறன் என்றது தலைவனை. 5. இது தலைவி கூற்று. தோழி கூற்றுமாம். நீயிர் கூறியதனை யாம் மெய்யெனக் கொண்டு நும்மொடு நக்கது மடமை என்றாள். 6. ஒரு கண் சிறங்கணித்தாள்போல என்னை நோக்கிப் பின் றன்னுள்ளே நகும். சிறங்கணித்தல் -- கண்ணைச்சுருக்கி நோக்குதல். தலைவ |