பக்கம் எண் :

பொருளதிகாரம்13

“நாநகை யுடைய நெஞ்சே நம்மொடு
1தான்வரு மென்ப தடமென் றோளி.”

(அகம்-121)

எனப் 2பிறர்மடம் பொருளாக நகை தோன்றிற்று. பிறவும் அன்ன.

இவ்வோதப்பட்டவற்றுக்கெல்லாம் உவகை உரித்து. உள்ளப்பட்ட நகை நான்கு என்றதனான் உள்ளத்தோடு பிறவாத நகையுமுள; அவை,

“வறிதகத் தெழுந்த 3வாயண் முறுவலள்.”

(அகம்-5)

என்றாற்போல வருவனவெனக் கொள்க.

(4)

[அழுகைச்சுவை இத்துணைய எனல்]

253. இளிவே யிழவே யசைவே வறுமையென
விளிவில் கொள்கை யழுகை நான்கே.

இது, முறையானே அழுகையென்னுஞ் சுவையினைப் பொருள்பற்றி உணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : இளிவும், இழத்தலும், அசைதலும், வறுமையுமென இந்நான்கு பொருள்பற்றித் தோன்றும் அவலம் என்றவாறு.

இளிவென்பது, பிறரான் இகழப்பட்டு எளியனாதல். இழவென்பது, தந்தையுந் தாயு முதலாகிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் 4நுகர்ச்சி முதலாயவற்றையும் இழத்தல். அசை வென்பது, 5பண்டை நிலைமைகெட்டு வேறொருவாறாகி வருந்து


னோக்குதலைக் கண்டு தானும் விடாது நோக்கி நக்கதுமடமை என்பது இவ்வுரையாசிரியர் கருத்துப்போலும். இவ் வுதாரணம் அத்துணைப் பொருத்தமாய்க் காணவில்லை.

1. தான்வருமென்றது மடம்பற்றியது. கொளுத்திய இன்பத்தைக்கொண்டு அதனை விடாமல் தானும் வருவேனென்று தலைவி கூறியது மடமை. கொளுத்தல் -- அறிவித்தல்.

2. பிறர் என்றது தலைவியை. இது பொருள்வயிற் பிரியுந் தலைவன் கூற்று.

3. வாயண் முறுவல்-- வாயிற் பொருந்திய நகை. இப்பாடமே பொருத்தமானது.

4. நுகர்ச்சி-- அனுபவித்த பொருள்.

5. பண்டை நிலைமை-- தான் முன்னிருந்த நிலைமை.