பக்கம் எண் :

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

(உரைவளம்)

களவியல்

களவு - யாழோர் கூட்டம்

89.இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
 அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே

ஆங்கில மொழிபெயர்ப்பு

இலக்குவனார்

In the five aspects of l0ve interlinked with pleasure, wealth and virtue, the love-meeting is in the nature of one of the eight systems of the marriage of the vedic people, i.e., the marriage system of the celestials who find delight in the music of the lyre.

பிற்கால இலக்கண நூல்கள்

அவிநயம் (யா.வி. ஒழிபியல் 96)

மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தில்
மெய்யுறு வகையுமுள் ளல்லது உடம்படாத
தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகைபெருகிய
களவெனப்படுவது கந்தருவ மணமே.