Primary tabs
xii
பிற்கும் பெருமைக்கும் இழுக்கு ஏற்படாதவாறு பணியாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உடையவள்.
செவிலி
நற்றாயின் தோழியே செவிலியாவாள். நற்றாய் போல் இருந்து தலைவியின் களவொழுக்கத்தைத் தன் மகள் மூலம் உணர்ந்து தானும் ஆய்ந்து அறிந்து, கவன்று, தலைவியைக் காக்க வேண்டிய முறையில் காத்து, நற்றாய்க்கு மரபு வழுவாமல் உணர்த்தி, அவள் மூலம் தந்தைக்கும் தமையன்மாருக்கும் உணர்த்தும் இயல்புடையவள்.
நற்றாய்
தன் ஐயத்தினாலும், செவிலியின் மூலமும் தன் மகளின் களவொழுக்கத்தினை உணர்பவள் நற்றாய். செவிலியைப் போலவே அதற்காக வருந்துவாள். தந்தைக்கும், தமையன்மாருக்கும் குறிப்பால் களவொழுக்கத்தினை உணர்த்துவாள். ஆனால் தந்தையைப் போலவோ தமையன்மாரைப் போலவோ சினம் கொள்ள மாட்டாள்.
தந்தை
நற்றாய்க் குறிப்பால் உணர்த்த, மகளின் களவொழுக்கத்தினை உணர்ந்தபொழுது சினமடைவான். பின்னர் ஆறுதலடைவான் மணத்திற்கு வேண்டிய செயல்களில் ஈடுபடுவான்.
தமையன்மார்
தந்தையைப் போலவே களவொழுக்கத்தினைக் குறிப்பால் உணர்ந்து சினம் கொள்வர். பின்னர் அடங்கி ஆறுதலடைவர்.
மணம்
களவு வெளிப்படுவதற்கு முன் வரைதல், வெளிப்பட்ட பின்னர் வரைதல் என மணம் இருவகையில் நிகழும். உடன் போக்கு நிகழும் காலங்களில் மணம் தலைவன் இல்லத்திலேயே நிகழ்வதும் உண்டு. அல்லது மீண்டு வந்து தலைவியின் இல்லத்தில் நிகழ்வதும் உண்டு.
உலகில் மனிதன் எப்படியாவது வாழ்ந்தால் போதும் (Survival of the fittest) என்ற கொள்கையுடன் வாழ்ந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்வியல் கூறுகளை இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள்.