அன்பொடு புணர்தல் ஒருதலையன்மையும் அவ்வோத்தினுள்1 கண்டு கொள்க. ஏனையிரண்டும்2 அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா. அஃதேல் அறனும் பொருளும் ஆகாமையும் வேண்டுமெனின், குலனும் குணனுங் கல்வியும் உடையராகிய அந்தணர் என விசேடித்தவழி ஏனையோர்க்கு இம்மூன்று பொருளும் இயைதல் வேண்டுமென்னும் நியமம் இன்மையின் ஏற்ற வழிக் கொள்ளப்படும்.3 இனி, ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும் அந்நிலமும் காலமும் கருப்பொருளும் களவினும் கற்பினும் வருதலின் அவை ஒரோவொன்று இருவகைப்படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும்4 களவாகிய காமக்கூட்டம் எனக் கொள்க. இன்னும் அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம் என்றதனால் எல்லா நிலத்தினும்1 காமக் கூட்டம் நிகழப் பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க. மறையோர் தேஎத்......யோரியல்பே என்பது-மறையோரி டத்தோதப்பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை2
1. புறத்திணையியலில். 2. கைக்கிளை, பெருந்திணை. 3. இயைதல் வேண்டும் என்னும் நியமம் இன்மையின் அதாவது இயைதலும் இயையாமையும் உண்மையின் அதுபோல ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ என விசேடித்தவழி ஐந்திணை அன்பொடு புணர்தல் ஒரு தலையாதல்போலக் கைக்கிளையும் பெருந்திணையும் அன்பொடு புணர்தல் உண்மையும் இன்மையும் ஏற்ற வழிக் கொள்ளப்படும். 4. புணர்ச்சியாகிய இருவகை-கற்புப் புணர்ச்சி களவுப் புணர்ச்சி. 5. முல்லை முதலிய நிலத்தினும் 6. துறை: சீறியாழ், பேரியாழ் எனவும் மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனவும் அமைவன. |