நல்யாழினையுடையராகிய துணைமையோர் நெறி என்றவாறு. மறையோர் என்றது அந்தணரை, தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன, பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம் இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது கன்னியை அணிகலன் அணிந்து பிரம சாரியாயிருப்பானொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகன் வேண்டிய வழி இருமுதுகுரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிட மாவது ஒன்றானும், இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுப்பது. தெய்வமாவது வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவற்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங் கூட்டம். அசுரமாவது வில்லேற்றினானாதல் திரிபன்றியெய்தானாதல் கோடற்குரியெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல். இராக்கத மாவது தலைமகன் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது. பைசாசமாவது, களித்தார் மாட்டுந் துயின்றார் மாட்டுங் கூடுதல். “அறன்நிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம் யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே இராக்கதம் பேய்நிலை என்றிக் கூறிய மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன் பொருண்மை என்மனார் புலமையோரே” என்பதனாலுங் கொள்க. துறையமை நல்யாழ் துணைமையோராவார் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் துணைமையோர் என்றார். துணையன்பாவது1 அவர் ஒழுகலாறோடொத்து மக்கண்
1. ‘துணைமையோரியல்பாவது’ என்றிருத்தல் வேண்டும். அவர் இயல்பாவது கந்தருவ ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் வேறு வேறிடத்திருந்து வந்தவர்கள் ஓரிடத்து எதிர்ப்பட்டபோதே உடலுறவு கொள்வது. |