பக்கம் எண் :

களவியல் சூ. 19

மருதம், நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்தவாறு என்னையெனின், கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பினராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப ஆதலானும் அவை நிகழுங்கால் அத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும் இவை அன்பொடு புணர்ந்தன என்க, அஃதேல் ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், அவை அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவை யாகலின், அன்பொடு புணர்ந்தனவாம்.

“அறத்திற்கே அன்பு சார்புஎன்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை*      (குறள்-76)

என்பதனாலும் கொள்க.

இனி, இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமும் ஆயினவாறு என்னையெனின், புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும் இன்பந் தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய1 ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப் பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி, வஞ்சி உழிஞை, தும்பை என்பனவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும் புணர்தல் முதலாகிய உரிப்பொருளான் வருவதோர் கேடின்மை யானும்2 பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின் வழி நிகழ்தலானும் பாலையாகிய வாகைப் படலத்துள் அறநிலை கூறுதலானும் இவை அறமாயின் அஃதேல், கைக்கிளை பெருந் திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அறமுதலாகிய மூன்றுமன்றி அன்பொடு புணர்தல் வேண்டுமெனின் காஞ்சி அன்பொடு புணராமையும் பாடாண்பாட்டு


*அறியாதவர் அறச்செயல்களுக்குத்தான் அன்பு துணையாகும் என்பர்; ஆனால் வீரச்செயல்களுக்கும் அவ்வன்பே துணையாம்.

1. குறிஞ்சி முதலாகிய என்றிருப்பின் நன்று

2. புணர்தல் பிரிதல் முதலிய உரிப்பொருள்களால் தலை மக்களுக்குக் கேடு இல்லாமையால் அவை ஒழுக்கப் பொருளாயின.