யன்ன நிகர்க்குஞ்சீ ராடமை மென்றோளி ரென்ன பெயரிரோ நீர்”1 இது பெயர் வினாயது, “நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு”2 (திணை மாலை-1) “தங்குறிப்பி னோருந் தலைச்சென்று கண்டக்கா லெங்குறிப்பி னோமென் றிகழ்ந்திரார்-நுங்குறிப்பின் வென்றிபடர் நெடுங்கண் வேய்த்தோளீர் கூறீரோ வன்றி படர்ந்த வழி” வன்றி-பன்றி “தண்டு புரைகதிர்த் தாழ்குரற் செந்தினை மண்டுபு கவரு மாண்டகிளி மாற்று மொண்டொடிப் பணைத்தோ ளொண்ணுத லிளையீர் கண்டனி ராயிற் கரவா துரைமின் கொண்டன குழுவி னீங்கி மண்டிய வுள்ளழி பகழியோ டுயங்கியோர் புள்ளி மான்கலை போகிய நெறியே” 3 இவை கெடுதி வினாயின. “மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ”4 (அகம்-110)
1. கருத்து: நெருங்கிய கதிருடைய தினைப் புனம் காப்பவர்களே! அன்னப் பறவை ஒத்த நடைச்சீரையும் அசையும் மூங்கில் போலும் தோளையும் உடையவர்களே! உங்களை ஒன்று கேட்டறிவேன் என்ன பெயருடையீர் நீங்கள்? கூறுக. 2. கருத்து: பக்கம் 90ல் காண்க. 3. கருத்து: தினைக்கதிரை யுண்ண வரும்கிளிகளை ஓட்டுகின்ற இளையவர்களே! தன் கூட்டத்தின் நீங்கி அம்பு பட்டவுடம்புடன் ஒரு மான் போன வழியைப் பார்த்தீராயின் கூறுமின். 4. மெல்லிய பரந்த இலையில் நீவிர் இடும் உணவையுண்டு ஆரவாரமிக்க சிறு குடியில் தங்கினால் என்ன குறைவரும்? தொ-8 |