பக்கம் எண் :

114தொல்காப்பியம்-உரைவளம்

“இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரிற்
றீது முண்டோ மாத ரீரே”

எனவும் வருவன ‘பிறவும்’ என்றதனாற் கொள்க.

குறையுறூஉம் பகுதி, குறையுறு பகுதி எனவுமாம்;1

எனவே, குறையுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறையோடு சேறலுங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவருமுள்வழி இவன் தலைப்பெய்தியுடையன் எனத் தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இருவரு முள்வழி அவன் வரவுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் ‘நாற்றமுந் தோற்றமும்’ (114) என்புழிக் கூறும் மதியுடம்பாடு மூவகையவென மேற்கூறுப.

தோழி குறை அவட்சார்த்தி மெய்யுறக் கூறலும்-தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவண் மேலே சேர்த்தி அதனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதலும்

(உ-ம்)

“கருங்கட லுட்கலங்க நுண்வலை வீசி
யொருங்குடன் றன்னைமார் தந்த கொழுமீ
னுணங்கல்புள் ளோப்பு மொளியிழை மாதர்
அணங்காகு மாற்ற வெமக்கு”2

“பண்பும் பாயலுங் கொண்டன டொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறு மொண்டொடி
யைதமர்ந் தகன்ற வல்குற்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே3      (ஐங்குறு-176)

இவை வெளிப்பட்டன. இவற்றின் வேறுபாடு உணர்க.


1. குறையுறூஉம்பகுதி - குறையை அறிவுறுத்தும் பகுதி (தோழி தாயர்க்கு அறிவுறுத்தல்) குறையுறு பகுதி-குறையுற்று நிற்கும் பகுதி (தலைவன் செயல்)

2. கருத்து: தன் தமையன்மார் கருங்கடலுட்புக்கு அது கலங்க வலைவீசிக் கொண்டுவந்த கொழுத்த மீன் உணங்கலைக் கவரவரும் புட்களை ஓட்டும் மாதரே எமக்கு மிகவும் அணங்காவாள்.

3. கருத்து: தொடியினையும் அல்குலையும் தளி