பக்கம் எண் :

116தொல்காப்பியம்-உரைவளம்

(உ-ம்)

“கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம்
வகைசே ரைம்பா றகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப்
பெருங்கண் ணாய முவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கு நிலவுமணன் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
யருளினு மருளா ளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉ
மருந்துபிறி தில்லை யானுற்ற நோய்க்கே” 1      (நற்றிணை-140)

இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க.

“கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங்
கொடுங்கழி மருங்கி னடும்புமலர் கொய்துங்
கைதை தூக்கியு நெய்தல் குற்றும்
புணர்ந்தாம் போல வுணர்ந்த நெஞ்சமொடு
வைகலு மினைய மாகவுஞ் செய்தார்ப்
பசும்பூண் வேந்த ரழிந்த பாசறை
யொளிறுவே லழுவத்துக் களிறுபடப் பொருத
பெறும்புண் ணுறுநர்க்குப் பேஎய் போலப்
பின்னிலை முனியா நம்வயி
னென்னென நினையுங்கொல் பரதவர் மகளே”2      (நற்றிணை-349)

தோழி நம்வயிற் பரதவர்மகளை யென்னென நினையுங் கொலென்க.


1. கருத்து: நெஞ்சே! தந்தையின் நெடுந்தேர் வந்து போகும் மணல் முற்றத்தில் விளையாடிய பந்தோடு செல்லும் அன்பற்றவளாகிய தலைவியை இத்தோழி நமக்கு இரங்கி சேர்த்துக் குறைமுடிக்கினும் முடியாது விடினும் பெரிதும் வருந்தி இவள்பின் நின்று இரத்தலை வெறுக்காதே. ஏன் எனின் யான் உற்ற நோய்க்கு இவளையன்றி மருந்து பிறிது இல்லை.

2. கருத்து: நெஞ்சமே! தலைவிக்காக நாம் தேர் ஏறிச் சென்றும் உப்பங்கழியிடத்துள்ள அடும்ப மலர் பறித்துத் தொடுத்தும் தாழைமலர் எடுத்தும் நெய்தற் பூக்களைப் பறித்தும் நாளும் இப்படியே அவளைப் புணர்ந்தது போலும் மகிழ்வுடன் துன்புற்றுவரவும் தோழியானவள்