“பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண்-வேலொத்தென் னெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன் கொலோ வஞ்சாயற் கேநோவல் யான்”1 (திணை. மாலை. நூற்-19) இவை பகற்குறி இரந்தன. “எல்லு மெல்லின் றசைவுபெரி துடையன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண.......வொருவன்2 (அகம்-110-112) எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறியவாறு காண்க. இன்னும் ‘இரட்டுறமொழிதல்’ என்பதனால் ‘தண்டாது’ என்பதற்குத் தவிராது இரப்பினுமெனப் பொருள் கூறிக் கையுறை கொண்டு வந்து கூறுவனவும், நீரேவுவனயான் செய்வேனெனக் கூறுவனவும், தோழி நின்னாற் கருதப் படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதன்கண் அடக்குக. (உ-ம்) “கவளக் களியியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற்-பவழக்
இரங்காமையின் அதற்காக வெறுக்காமல் போர்க்களத்தில் புண்பட்டுக் கிடக்கும் வீரர்களை அவர்கள் உயிர் போமளவும் காத்து நிற்கும் பேய்கள்போல இத்தோழி தலைவியை நம்முடன் புணர்க்க முடிவுகொள்ளும் வரையிலும் அவளை இரந்து பின்னிற்றற்கு வெறுப்பில்லாமல் இருக்கும் நம்மிடம் தோழியானவள் பரதவர் மகளாகிய தலைவியைப் பற்றி என் என்று நினைவாளோ? நம்மிடம் சேர்க்க நினைவாளோ மாட்டாளோ. 1. கருத்து: பால் போன்ற அருவியில் ஆடிப் பலபூக்களையும் கொண்டு வந்து பரப்பினாற் போலவுள்ள ஐவன நெல்லைக் கொண்ட புனத்தைக் காப்பவள்போலத் தன் வேல் ஒத்த கண்களை நெஞ்சுவழிப் புகுத்தி என் உயிர் போவதைக் காண வேண்டி உடம்பில் தங்குமாறு செய்தாள். அவள் மேனியின் சாயலுக்கே யான் மிக வருந்துவேன். 2. கருத்து: பகலும் ஒளியிழந்தது. தளர்வு மிகவுடையேன் மெல்லிலையில் விருந்துண்டு சிறு குடியில் தங்கினென்ன குறைவரும்.......என்றான் ஒருவன். |