கடிகை யிடைமுத்தங் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு”1 (திணைமாலை-42) நின் வாயிதழையும் எயிற்றையுங் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க. “நறவுக்கம ழலரி நறவு வாய்விரிந்து நிறந்திகழ் கமழு மிணைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி யொண்சுணங் கிளமுலை யொருஞான்று புணரி னுண்கயிற் றுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி யிவ்வூர்ச் செய்தூட் டேனோ செறிதொடி யானே” 2 "அறிகவளை யைய விடைமடவா யாயச் சிறிதவள்செல் லாளிறுமென் றஞ்சிச்-சிறிதவள் நல்கும்வாய் காணாது நைந்துருகியென்னெஞ்ச மொல்கும்வா யொல்க லுறும்”3 (திணைமாலை-17) எனவரும். மற்றைய வழியும்-குறியெதிர்ப் பட்டுங்கையுறை மறுக்கப்பட்டுங் கொடுக்கப் பெற்றும் இரந்து பின்னின்றான் அங்ஙனங்
1. கருத்து: இவளின் கையிடைப்பட்ட தொடிகளின் முத்துகள் திரண்டு இவளின் வாயிடையுள் முத்துகளை (பற்கள)ப் பார்க்குந் தோறும் புலிக்குட்டி நடைகற்பினும் அதற்கு எதிராக அஞ்சி நில்லாத கவளம் கொள்ளும் மதஇயல்புடைய பெரிய யானை போல நில்லாமல் தோற்கும். 2. கருத்து: நெறிந்த தாழ்ந்த கூந்தலுடையாளே! கண்ணித் தலையரும் கருங்கைப் பரதவரும் நின் தமையன்மார் அல்லரோ? நின் இளமுலையுடையாளை ஒரு நாள் நான் புணரப்பெறின் அப்பரதவருடை வலை கொண்டு வீசி அதனால் வரும் வளம் கொண்டு நுங்களை உண்ணச் செய்ய மாட்டேனோ? 3. கருத்து: தோழியே உண்டோ இல்லையோ என ஐயுறும் படியான இடையானது சிறிது அவள் நடவாளாயபோதே ஒடியும் ஒடியும் என அஞ்சும் என் நெஞ்சம். சிறிது அவள் எனக்கு அருள் செய்யும் இடம் காணாமல் நைந்து உருகி அவள் நடக்கும் போதெல்லாம் தான் தளர்ந்து வருந்துவதாயிற்று. |