பக்கம் எண் :

களவியல் சூ. 11 119

குறியெதிர்ப்பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ்விடத்தும்:

(உ-ம்)

“நின்செயல் செத்து நீபல வுள்ளிப்
பெரும்புன் பைதலை வருந்த லன்றியு
மலைமிசைத் தொடுத்த மலிந்து செனீத்தந்
தலைநாண் மாமலர் தண்டுறைத் தயங்கக்
கடல்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்
றறல்வார் நெடுங்கயத் தருநிலை கலங்க
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்
கவ்வாங் குந்தி யஞ்சொற் பாண்மக
ணெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகிற்
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வே லெவ்வி
நயம்புரி நன்மொழி யடக்கவு மடங்கான்
பொன்னிணர் நறுமலர்ப் புன்னை வெஃகித்
திதியனொடு பொருத வன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய
கயலென வமர்த்த வுண்கட் புயலெனப்
புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பான்
மின்னேர் மருங்குற் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே” 1      (அகம்-126)

எனவும்,

“மாய்கதில் வாழிய நெஞ்சே நாளு
மெல்லியற் குறுமக ணல்லக நசைஇ
யரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி
யிரவி னெய்தியும் பெறாஅ யருள்வரப்


1. கருத்து: மடநெஞ்சே! குறுமகளாகிய தோழியின் பின்னின்று இரத்தலை விடாது நீ துன்புற்று வருந்தலன்றியும், எவ்வி என்பான் நன்மொழி சொல்லவும் கேளானாகித் திதியனின் காவல் மரமாகிய புன்னையை வெட்ட விரும்பிச் சென்று போரிட்டு மாய்ந்த அன்னி என்பவனைப் போல நீ இறந்து படுவையோ.