பக்கம் எண் :

120தொல்காப்பியம்-உரைவளம்

புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத்
துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக்
காமங் கைம்மிக வுறுதர
வானா வரும்படர் தலைத்தந் தோயே” 1      (அகம்-258)

எனவும் வருவன, தன்னெஞ்சினை இரவு விலக்கியன.

சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவிதானே கூடிய பகுதியினும்,

“களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும்”      (தொல். பொ. கள. 29)

என்பதனால் தலைவியாற் குறிபெற்றுந் தோழியை இரக்கும்.

(உ-ம்)

“அயத்துவளர் பைஞ்சாய் முருந்தி னன்ன
நகைப்பொலிந் திலங்கு மெயிறுகெழு துவர்வா
யாகத் தரும்பிய முலையள் பணைத்தோண்
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயு மறியா மறையமை புணர்ச்சி
பூசற் றுடியிற் புணர்புபிரிந் திசைப்பக்
கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையிற்
கடும்புனன் மலிந்த காவிரிப் பேர்யாற்று
நெடுஞ்சுழி நீத்த மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருந
லாக மடைதந் தோளே வென்வேற்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
யொளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக்


1. கருத்து: நெஞ்சமே! நாளும் குறுமகளது மார்பை விரும்பி இரவில் பாம்பும் இரைதேடும் சிறுவழியில் வந்து குறியிடம் சேரினும் அவள் வருதலைப் பெறாய் ஆயினை. புல்லென்ற கண்ணுடையையாய்த் தனிமை கொண்டு உலகத்தார்க்கெல்லாம் நகையாகக் காமம் நமக்கு அளவு கடக்கத் துயரந்தந்தாள் அவள். என் செய்வது இனி இரவில் வாரற்க நின் துயர் மாய்க, வாழி.