பக்கம் எண் :

களவியல் சூ. 11 121

கடவு ளெழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅ யோளே”1      (அகம்-62)

“அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கிள ணுணங்கிடைப்
பொங்கரி பரந்த வுண்க
ணங்கலிழ் மேனி யசைஇய வெமக்கே” 2      (ஐங்குறு-174)

எனவரும்.

‘வகை’ என்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க.

“தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை
குளிர்வாய் வியன்புனத் தெற்பட வருகோ
குறுஞ்சுனைக் குவளை யடைச்சி நாம் புணரிய
நறுந்தண் சார லாடுகம் வருகோ
வின்சொன் மேவலைப் பட்டவெ னெஞ்சுணக்
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென
யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து
தான்செய் குறிநிலை யினிய கூறி
யேறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்
டுறுகழை நிவப்பிற் சிறுகுடிப் பெயருங்


1. கருத்து: கொல்லிப் பாவை போலும் மாயோளாகிய தலைவி தன்னுடன் கொண்ட பேயுமறியாத மறைந்த புணர்ச்சியை ஊரவர் கூடியும் தனித்தும் அலரெழுப்புவதால் இனி அவ்வொழுக்கத்தில் நாம் செல்லற்கு அரிதாகிய காரணத்தால் அது நினைந்து காவிரி வெள்ளத்தில் படிந்து குளிப்பவள் போல் என் மார்பில் நேற்றுக் கிடந்தனள். இன்று அல்லகுறிப்படலாயிற்று. இது தலைவன் அல்லகுறிப்பட்ட வழித் தன் நெஞ்சுக்குக் கூறியது.

2. கருத்து: தெய்வம் உடைய குளிர்ந்த துறையுடைய தொண்டி நகரில் மணம்கமழ் சோலையில் அணியினையும் உண்கண்ணினையும் விளங்கு மேனியையும் உடைய இவள் தன்னையடைய விரும்பி மெலிந்துள்ள எனக்குத் தன்னைக் கூடுதற்குரிய இடம் இது எனக் குறித்தாள். இனிச் சென்று கூடுவேனாக.