விரிபூங் கானலொரு சிறை நின்றோ யாரை யோநிற் றொழுதனம் வினவுதுங் கண்டோர் தண்டா நலத்தை தெண்டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ விருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை யென்றனெ னதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லித ழுண்கணும் பரந்த வாற்பனியே”. 1 (நற்றிணை-155) “தண்டழை செரீஇயுந் தண்ணென வுயிர்த்துங் கண்கலுழ் முத்தங் கதிர்முலை யுறைத்து மாற்றின ளென்பது கேட்டன மாற்றா வென்னினு மவளினு மிகந்த வின்னா மாக்கட்டிந் நன்ன ரூரே”. 2 “தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் றொண்டி யன்னவெற் கண்டு நயந்துநீ நல்காக் காலே” 3 (ஐங்குறு-178) என வரும். அயர்த்தது அவள் அருமை தோன்றுதற்கு. தோழி நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி-தோழி இவ் விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற்றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து, உம்மை:- சிறப்பு. இதுவே மடன்மா கூறுதற்கு ஏதுவாயிற்று. “நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்ப் பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
1. கருத்து: பக்கம் 67-ல் காண்க. 2. கருத்து: தழை செருகியும் பெருமூச்சு விட்டும் முலையில் கண்ணீர்த் துளிகளை யுறைத்தும் இப்படியாத் தன் துயரை ஆற்றினள் என்பதைக் கேட்டோம். துயரைத் தாங்க முடியாத என்னிலும் அவளினும் நீங்கிய கொடிய மக்களையுடையது இந்த நல்ல ஊர். 3. கருத்து: பக்கம் 91ல் காண்க. |