சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதலும் தீராத் தேற்றமும் இடந்தலைப்பாட்டுக்குரியன. இனி மெய் தொட்டுப் பயிறல் முதல் தீராத் தேற்றம் ஆகியவற்றைத் தொகைக் கொடுத்துப் ‘பேராச் சிறப்பின் இரு நான்கு கிளவியும்’ என்றமையால் அவ்வெட்டுமே ஒரு கூட்டத்துக்குரியன எனக் கொள்ளின் இடந்தலைப்பாடு என்னும் ஒன்றற்கேயுரியன என்னலும் ஆம். அப்படியாயின் அவ்வெட்டும் இரண்டாம் நாள் இடந்தலைப் பாட்டிற்கேயுரியன என்னலாம். இங்கோர் ஐயம் எழும். அதாவது இயற்கைப் புணர்ச்சியில் கூடினார் இருவரும் புணர்ந்தவுடனேயே யாதோர் கூற்றும் இன்றிப் பிரிந்தனரா என்பது அது. அதனால் மெய்தொட்டுப் பயிறல் முதலிய ஆறும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த அப்பொழுதே நிகழ்வன எனக் கொள்வதே சிறக்கும். இனி இயற்கைப் புணர்ச்சி முடிந்து பிரிவு நேரும்போது தலைவிக்கு வரும் ஐயம் நீக்க வேண்டித் தலைவன் செய்யும் சூளுறவுக்கு இடம் யாதெனின் கூடுதல் உறுதல் என்பதைக் கொள்ளலாம். பிரியேன் தரியேன் எனக் கூறி மீண்டும் கூறுதற்குச் சூளுறவு கொள்ளும் என்ற கருத்திலேயே கூடுதலுறுதல் அமைந்தது என்னலாம். தீராத் தேற்றம் சூளுறவாகும் என நச்சினார்க்கினியர் கொண்டதில் இடந்தலைப்பாட்டில்தான் சூளுறவு நிகழும் என்பதாக அமைந்தது. அதனினும் இயற்கைப் புணர்ச்சி முடிந்த பின்னர் அப்போதே சூளுறவு நிகழ்ந்ததாகக் கொள்வதே முறை. 100. | பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் | | அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக்கு இயல்பே (12) |
ஆ. மொ. இல. If the lover is advised to cease from his loving on account of any reason in a polite manner, if he is pining on account of the intense love, if ‘tholi’ laughs at him |