பக்கம் எண் :

128தொல்காப்பியம்-உரைவளம்

joyfully, if he finds pleasure in having his lady-love and if he meets her unexpectedly on the way, the act of expression may take place (on his part)

இளம்.

என்-எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.

(இ-ள்) : மேல் தலைமகன் ‘மடல்மாகூறும் இடனுமாருண்டே’ என்றார். இஃது அவன் மடல்மா கூறுதற்கு நிமித்தமாகிய நீக்கத்தினை மாறுபட்டுக் கூறாத் தலைமகள் இயல்பைக் கூறிப் பெயர்ப்பினும், அஃதறிந்து தாம் உடன்படத் தலைமகன் வருத்தத்தினான் மெலிகின்றமை கூறிய இடத்தினும் தலைமகன் குறையை மறுப்புழி அன்பு தோன்ற நக்க இடத்தும், தோழி உடன்பாடுற்றவழியும் தலைமகனும் மேற் சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு.

உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை1

பண்புற் பெயர்ப்பினும்-தலைமகள் இளமைப் பண்பு கூறிப் பெயர்த்த வழித் தலைவன் கூறியது. அதற்குச் செய்யுள்:

“குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி
வளையள் முளைவாள் எயிற்றள்
இளைய ளாயினும் ஆரணங் கினளே”      (ஐங்குறு-256)

பரிவுற்று மெலியினும்-பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறுதலும். பரிவுற்றுத் தோழி மெலிதலாவது ‘உடம்படுவளியாள்’3 என்றாற்போல வருவது.


1. ஆற்றிடையுறுதலும் என்பதில் உள்ள உம்மை முன் சூத்திரத்திலுள்ள மடன்மா கூறுதலைத் தழுவுதலின் இறந்தது தழீஇய எச்சவும்மை.

2. மடமகள் கொடிச்சி இளையளாயினும் என்னை மிக வருத்தினாள் எனத் தலைவன் கூறியது தோழி தலைவியின் இளமைப் பண்பு கூறியபோது அதை மறுத்துக் கூறியதாம்.

3. உடம்படு அளியாள் - கூட்டத்துக்கு உடன்படுத்துமாறு இரங்கத் தக்கவள். பரிந்த உள்ளத்துடன் மெலிதலாவது-தோழி தலைவனின் இரந்து பின்னிற்றலுக்கிரங்கித் தன் எண்ணத்தில் நெகிழ்தல், அதாவது கூட்டுவிக்க உடன்படல்-முன்னர் நீக்கி நிறுத்தும் எண்ணத்திலிருந்தவள் அதனின் மெலிதல் (-நெகிழ்தல்)