அவ்வழித் தலைமகன் கூற்று; “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்குந் துயர்”1 (குறள்-1135) அன்புற்று நகினும்-அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்ககாலும் கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்:- “நயனின் மையிற் பயனிது என்னாது பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரல் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்க முற்றவென் பைதல் நெஞ்சம் உய்யு மாறே.” 2 (நற்றிணை-75) அவட்பெற்று மலியினும்-தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழ்தல். இரட்டுற மொழிதலான் தலைமகளை இரு வகைக் குறியினும் பெற்று மகிழினும் என்றும் கொள்க-
1. (இவ் ஆற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன என்றாட்குச் சொல்லியது) மாலைப் பொழுதின் கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன் அறியேன்; இப்பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை யுடையாள் தந்தாள். 2. கருத்து: குறுமகள் (தோழீ)! நின்னிடம் இரக்கம் இன்மையால் இன்னபடிச் சொல்வது பயன் எனக்கருதாமல் பாம்பு கடித்ததுபோல என்னை நகைத்துக் கூறியது தகாது. நீ நகைத்து உரைப்பதால் என் நெஞ்சம் உடையும். ஆயிழையின் கருங் கண்களின் பொருந்தாத பார்வையுற்ற என் நெஞ்சம் துன்புறுதலின் நீங்கி உய்யுமாறு நகையாடாது என் குறை நேர்ந்து நல்லன கூறுக. தொ.-9 |