பக்கம் எண் :

138தொல்காப்பியம்-உரைவளம்

“காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
மாணிழை கண்ணொவ்வே மென்று”      (குறள்-1114)

இஃது இரவுக் குறிக்கண் அவட்பெற்று மலிந்தது.

“கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது
நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி
யரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்விரை கமழுங் கூந்தற் றூவினை
நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பி
னிளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூ
லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து
துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோ
ளான்ற கற்பிற் சான்ற பெரிய
அம்மா வரிவையோ வல்ல டெனாஅ
தாஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய வுருகெழு கவாஅ
னேர்மலர் நிறைசுனை யுறையுஞ்
சூர்மகள் மாதோ வென்னுமென் னெஞ்சே” 1      (அகம்-198)

என வரும்.

“விண்ணகம் விளக்கல் வேண்டி நம்மிற்
பிரியினும் பிரியுமோ பெருந்தோட் கொடிச்சி
வானஞ் சூடிய திலகம் போல
வோங்கிரு விசும்பினுங் காண்டு
மீங்குங் காண்டு மிவள்சிறு நுதலே” 2

இதுவும் அது.


1. கருத்து: என் நெஞ்சே! நாம் விட்ட நன்மொழி நம்பி கண் மலர் வேய்ந்து அம் சிலம்பு ஒலியடக்கி மயில்போல் அஞ்சி வந்து நடுயாமத்துப் புணர்ந்து செல்வோள் மண் மடந்தையல்லள்; சுனையிடத்து உறையும் சூரர மகளாவாள்-தலைவன் கூற்று.

2. கருத்து: கொடிச்சியின் நுதலை விசும்பில் வானம் சூடிய திலகம் போல விளங்கக் காண்போம். இம் மண்ணுலகி