பக்கம் எண் :

களவியல் சூ. 12139

ஆற்றிடை உறுதலும்-தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின இடத்தும் என்றது, தலைவியுந் தோழியும் வரும் வழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு.

(உ-ம்)

“குருதி வேட்கை யுருகெழு வயமான்
வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு
மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவி னாண்மேயல் பரக்கு
மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை
நீநயந்து வருத லெவனெனப் பலபுலந்
தழுதன ளுறையு மம்மா வரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்னநின்
மாணல முள்ளி வரினெமக்
கேம மாகு மலைமுத லாறே” 1      (நற்றினை-192)

எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது.

“இரட்டுற மொழிதல்” என்பதனான் ‘ஆற்றிடையுறுதற்கு’ வரைவிடைவைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுங் கொள்க. அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாங்கற்குக் கூறுவனவுமாம்.

“ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே” 2      (குறுந்-235)


லும் காண்போம். நம்மொடு இங்குக் கூடியிருக்கும் இவள் தன் நுதலால் வானை ஒளி பெறச் செய்ய வேண்டி நம்மைப் பிரிவாளோ?

1. கருத்து பக்கம் 131-ல் காண்க.

2. கருத்து: பக்கம் 132-ல் காண்க.