பக்கம் எண் :

140தொல்காப்பியம்-உரைவளம்

“கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே யுணர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடித் தந்தை யூரே”1      (குறுந்-233)

அவ்வினைக்கு இயல்பே-அத் தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணம் ஆம் என்றவாறு,

சிவ.

இச் சூத்திரமும் தலைவன் கூற்று நிகழுமிடம் கூறுகின்றது.

அவ்வினைக்கு இயல்பு என்பது பொதுப்படத் ‘தலைவன் கூற்று வினைக்கு இயல்பு’ என்று நால்வகைக் களவுப் புணர்ச்சிக்கும் பொதுப்படக் கொள்ளுமாறு அமையினும் தோழியிற் கூட்டத்து நிகழும் கூற்று என்றே கொள்ளுதல் வேண்டும். என்னை? பண்பு கூறிப் பெயர்த்தலும், அன்புற்று நகுதலும்’ ஆற்றிடை கூறுதலும் ஆகிய செயல்கள் தோழிக்கே யுரியனவாதலின் என்க.

இச் சூத்திரத்துக்கு உரையாளர் அனைவர் உரைகளையும் கொண்டு கூற்றைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பாங்கன் நிமித்த வகை

101. பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப      (13)

ஆ. மொ.

இல.


1. பாங்கனே! உயர்ந்தோர்க் களித்து மிஞ்சிய சோற்றை யாவர்க்கும் இல்லையென்னாது வழங்குவோனாகிய அவளின் தந்தை யூரானது, கவலைக்கிழங்கு தோண்டிய குழியில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து செல்வரின் மூடி திறந்த பேழை போல் தோன்றும் படியாக மழையை ஏற்கும் முல்லை நிலத்தின் கண்ணது. அதோ தோன்றுவது காண்.