கலவியின் மகிழ்தலும் புகழ்தலும் தலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும் பாங்கிற் கூட்டலும் என்றிங் கெட்டுநா லாறும் காட்டிய பாங்கற் கூட்டத்து விரியே. மாறன். 28, 29. சார்தல் வினாதல் செப்பல் எதிர்மறை நேர்தல் கூடல் கூட்டம் என்றாங்குப் பார்புகழ் எழுவகை பாங்கற் கூட்டம். செம்மல் பாங்கனைச் சேர்தலும் பாங்கன் செம்மலொடு உற்றது வினாதலும் செம்மல் உற்ற துரைத்தலும் மற்றவன் கழறலும் உரவோன் கழற்றெதிர் மறுத்தலும் உரவோற் பழித்தலும் வேட்கை கழித்தற் கருமை சாற்றலும் தன்மனத்து அழுங்கலும் தலைவனோடு ஏற்றற்கு அழுங்கலும் ஏகுஅவன் என்றலும் எவ்விடத் தெவ்வியற் றென்றலும் இறைவன் அவ்விடத் தவ்வியற் றென்றலும் பாங்கன் இறைவனைத் தேற்றலும் குறிவழிச் சேறலும் இறைவியைக் காண்டலும் இறைவியை எளிதின் காட்டிய கடவுளைக் கண்ணுற் றிறைஞ்சலும் வாள்தடங் கண்ணியை மதித்தவன் வியத்தலும் இகழ்ந்ததற் கிரங்கலும் இறைவன் தன்னையே புகழ்ந்தவன் வியத்தலும் புரவலன் தன்னொடு நவ்வியங் கண்ணி நன்னிலை யுரைத்தலும் செவ்வி செப்பலும் செம்மல் அங்கு ஏகலும் இணை மலர்க் குழலியை இறைவன் காண்டலும் புணர்தலும் புகழ்தலும் பூங்கொடி தன்னைப் பாங்கியொடு வருகெனப் பகர்ந்து பின்னர் ஆயத் துய்த்த லொடு அம்மூ வொன்பதும் ஏய பாங்கன் கூட்டத்து விரியே. இல. 504, 505 நம்பி. 126, 127. சூத்திரங்களே |