பக்கம் எண் :

களவியல் சூ. 13143

முத்து. 836.

நினைதலும் வினாதலும் உற்ற துரைத்தலும்
கழறல் மறுத்தலும் கவன்று உரைத்தலும்
வலியழி வுரைத்தலும் விதியொடு வெறுத்தலும்
நொந்து கூறலும் நோதல் நீங்கி
இயலிடங் கேட்டலும் இயலிடங் கூறலும்
வற்புறுத்தலுங் குறிவழிச்சேறல் காண்டலும்
வியந்து ரைத்தலும் மெல்லியல் தன்னைக்
கண்டமை கூறலும் கருத்துக் கேற்பச்
செவ்வி செப்பலும் அவ்விடத் தேகலும்
ஈங்கிவை நிற்ப விடந்தலை தனக்கும்
ஆங்கவண் மெலிதலும் பொழில் கண்டு மகிழ்தலும்
நீங்கா மகிழ்வொடு நிலை கண்டு வியத்தலும்
தளர்வகன் றுரைத்தலும் மொழிபெற வருந்தலும்
கண்புதைக்க வருந்தலும் நாண்விட வருந்தலும்
நண்பொடு சென்றுபோய் நன்மருங் கணைதலும்
இன்றியமையா மையியம் பலும் ஆயத்து
உய்த்தலும் நின்று வருந்தலும் பிறவும்
துன்று பாங்கன் துறையென மொழிய

இளம்.

என்-எனின்-பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகுமிடம் இத்துணையென வரையறுத் துணர்த்துதல் நுதலிற்று.

பாங்கராயினர் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகை என்றவாறு.

நிமித்தம் என்பது நிமித்தமாகக் கூடும் கூட்டம், அக்கூட்டம் நிமித்தமென ஆகு பெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன: பிரமம் முதலிய நான்கும் கந்திருவப் பகுதியாகிய களவும், உடன் போக்கும் அதன் கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை,