(இ-ள்) : பாங்கன் காரணமாக நிகழும் கூட்டம் பன்னிரண்டு என்பர். பன்னிரண்டாவன: 1. காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை யெய்திய தலைவனை அவளொடு கூட்டுவது. 2. காமக் கூட்டத் தொடக்கத்தில் காட்சி ஐயம் துணிவு நிகழ்ந்தவுடன் மேலும் புணர்ச்சிக்கு முயலாமல் பாங்கனைக் கொண்டு கூடலாம் என எண்ணித் தலைவன் பாங்கனை அணுக அவனால் கூடுவது. 3. இயற்கைப் புணர்ச்சிப் பின்னர் இடந்தலைப்பாடு கொண்டோ கொள்ளாமலோ பாங்கன் நிமித்தமாகக் கூடுவது. 4. தோழி களவொழுக்கத்தில் உடன்போக்குக்குத் துணை நிற்பதுபோல் பாங்கன் துணை நிற்க உடன்போவது. 5. களவொழுக்க முடிவில் தலைவன் தலைவியரின் உற்றார் உறவினருடன் பேசி, மணவினை நிகழ்ச்சிக்குத் துணையாக நிற்க மணந்து கூடுவது. 6. கற்பொழுக்கத்தில் தலைவி ஊடலை நீக்கத் துணை நிற்க அதனால் கூடுவது. 7. காமக்கிழத்தியின் ஊடல் நீக்கத்துக்குத் துணை நிற்கக் கூடுவது. 8. காதற் பரத்தையின் ஊடல் நீக்கத்துக்குத் துணை நிற்கக் கூடுவது. 9. களவொழுக்கத்தில் தலைவியைத் தலைவன் அடைய இடையூறுகள் நிகழ அதாவது பெற்றோர் உடன்படாமை போலும் தடைகள் நிகழத் தலைவன் மடல் ஏறுவானாயின் அது காரணமாகப் பாங்கன் முன்னின்று இருவரையும் சேர்த்து வைக்க மணந்து கூடுவது. 10. தன்னின் வயதில் மூத்தாளை விரும்பிய தலைவனைப் பாங்கன் முன்னின்று அவளுடன் சேர்த்து வைக்க மணந்து கூடுவது. 11. தலைவன் ஒருத்தியை விரும்பித் தேறுதல் இல்லாமல் காமம் மிக்கபோது பாங்கன் துணை நின்று மணம் புணர்த்தக் கூடுவது. |