பக்கம் எண் :

களவியல் சூ. 14147

12. தான் விரும்பியவளை அடைய முடியாத போது காம மிகுதியினால் அவளை வலிதிற் கொண்டு செல்லப் பாங்கன் துணை புரிவதன் மூலம் கூடுவது.

உரையாளர்கள் பிரமம் பிரசாபத்தியம் முதலிய ஆரிய மணங்களையுட் கொண்டு கூறியவுரைகள் தமிழ் மரபுக்கு ஏலாமை யறிக. இது முன்னரும் கூறப்பட்டது.

பாங்கர் பலராதலின் ‘பாங்கர் நிமித்தம்’ எனப் பாடங் கொண்டார் இளம்பூரணர். பலராயினும் ஒருவனே உயிர்ப் பாங்கனாதல் இயலும் ஆதலின் நச்சினார்க்கினியர் ‘பாங்கன் நிமித்தம்’ எனப் பாடம் கொண்டார். ஆரியத் தொடர்பாக உரை வகுத்ததை ஏலாத வெள்ளைவாரணனார் பாங்காம் நிமித்தம் எனப் பாடம் கொண்டு, ‘இயற்கைப் புணர்ச்சிக்குப் பாங்காகும் நிமித்தம்’ எனவுரை கொண்டு, காட்சி. ஐயம், துணிவு, வேட்கை, உள்ளுதல் முதலாகச் சாக்காடு ஈறாகவுள்ள பன்னிரண்டும் பாங்காம் நிமித்தம் என்றார்.

இயற்கைப் புணர்ச்சி முன்னர் நிகழும் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் என்பனவற்றைக் கூறி வேட்கை முதலிய இருவர் உணர்வும் கூறிப் பின்னர்த் தலைவனின் கூற்றாக முன்னிலையாக்கல் முதலிய கூறி இயற்கைப் புணர்ச்சியை முடித்த ஆசிரியர், பின்னர் மெய் தொட்டுப் பயிறல் முதலிய நிகழ்ச்சிகளால் தலைவனுக்குக் கூற்று நிகழுமாறு கூறுவார் இடந்தலைப்பாடு பாங்கற் கூட்டம் பாங்கியிற் கூட்டம் ஆகியவற்றில் கூற்று நிகழுமாறு கூறியவர் அடுத்துப் பாங்கற் கூட்டம் பற்றிக் கூற வேண்டுமாதலினாலும் தொடர்ந்து தோழியிற் கூட்ட விவரம் கூறுகின்றாராதலினாலும் ‘பாங்கன் நிமித்தம்’ என்னும் பாடமே சிறக்கும். ‘பாங்கா நிமித்தம்’ என்பது பொருந்தாது.

கைக்கிளைக் குறிப்பு

102. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே      (14)

ஆ. மொ.

இல.

The first three belong to ‘Kaikilai’ (One side love).