பக்கம் எண் :

148தொல்காப்பியம்-உரைவளம்

இளம்.

என்-எனின், மேற் சொல்லப்பட்ட பன்னிருவகையினும் கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : எண் வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும் கைக்கிளைப் பாற்படும் என்றவாறு.

நச்.

(இவர் உரையினை அடுத்த சூத்திரத்தில் காண்க.)

வெள்.

இது மேற்கூறியவற்றுள் கைக்கிளைப்பாற் படுவன இவை யென்கிறது.

(இ-ள்) : மேற் கூறப்பட்ட நிமித்தம் பன்னிரண்டுடன் முற் கூறப்பட்ட காட்சி ஐயம் துணிவு என்பன மூன்றும் அன்பின் ஐந்திணைக் குரியவாதலேயன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குரிய குறிப்புக்களாகவும் அமையும் எ-று.

சிவ.

இச் சூத்திரம் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டனுள் முதல் மூன்றும் கைக்கிளைப் பாற்படும் என்கின்றது.

(இ-ள்) : முன்னேயுள்ள மூன்றும் கைக்கிளைத் திணையிற் குறிக்கப்படுவனவாகும்.

தலைவன் கொண்ட விருப்பம் இளமையோள் அறியாளாத லாலும். காட்சி ஐயம் துணிவு நிகழ்ந்த போது தலைவி விருப்பம் தலைவன் அறியானாதலாலும் அவையிரண்டும் ஒரு தலைக்காமமான கைக்கிளையின்பாற்படும். அன்பின் ஐந்திணைக் கள வொழுக்கத்தைச் சார்ந்ததாயினும் பாங்கற் கூட்டத்தில் பாங்கன் தலைவனொடு இருப்பது தலைவி அறியாளாதலாலும் பாங்கன் தலைவன் பக்கமாக இருத்தலாலும் பாங்கற் கூட்டமும் கைக்கிளைக் குறிப்பில் அடங்கும்.


முன்பின் என்பன இட முன்னாகக் கொண்டு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உரை கூறினர். இங்கு காலமுன், காலப் பின்னாகக் கொண்டு உரை கூறப்படுகின்றது.