பெருந்திணை 103. | பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (15) |
ஆ. மொ. இல. The last four belong ot ‘Perunthinai’ (Unnatural love). இளம். என்-எனின், மேற் சொல்லப்பட்டவற்றுள்ளும் பெருந்திணைக் குரியன வுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : எண்வகை மணத்தினுள் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணைப்பாற்படும் என்றவாறு. நச். முன்னைய....................................................குறிப்பே பின்னர் .....................................................பெறுமே மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மணத்தினுள் ஏழினை எழுதிணையுள் இன்னதிணைப் பாற்படும் என்கின்றது. (இ-ள்) : முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே-இதற்கு முன் நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும். பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே-பின்னர் நின்ற பிரமம் பிராசாபத்தியம் ஆரிடந் தெய்வமென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும் என்றவாறு, மன்றல் எட்டு என்ற வரலாற்று முறை1யானே வாளாது பன்னிரண்டென்றா ரென்பதே பற்றி ஈண்டும் அம்முறையானே
1. வரலாற்று முறை - வழிவழி யாவராலும் எளிதில் உணரப்பட்டு வழங்கி வரும் முறை. மணம் எட்டு என்பன யாவையெனத் தொல்காப்பியர் கூறாமல் ‘மன்றல் எட்டு’ எனத் தொகையிற் கூறியதால் அவ்வெட்டும் யாவை என்பது எல்லாராலும் எளிதில் அறியப் பட்டவை என்பது புலனாம். அவ்வாறே பாங் |