இடவகையான் ‘முன்னைய மூன்றும்’ ‘பின்னர் நான்கும்’ என்றார். எனவே இனிக்கூறும் ‘யாழோர்மேன’ (106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண்டற்கும்1 இடையதெனப் படுவதாயிற்று. வில்லேற்றியாயினுங் கொல்லேறு தழீஇயாயினுங் கொள்வலென்னும் உள்ளத்தனாவான் தலைவனே யாதலின் அதனை முற்படப் பிறந்த அன்பு முறை பற்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ் செய்தலாதலின் அதுவும் அப்பாற்படும்2 பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாயவாறு ‘காமஞ் சாலா யிளமை யோள் வயிற்’ (50) கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப் ‘புல்லித் தோன்றும்’ (50) எனக் கூறி, இதனை வாளாது ‘குறிப்பு’ என்றார். ஆண்டுப் பிற்காலத் தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும் வழிக் கூறாது அகத்திணையியலுட் கூறினார். ‘ஏறிய மடன்மா’ முதலியவற்றைப் ‘பெருந்திணைக் குறிப்பே” (51) எனக் கூறி, ஈண்டும் ‘பெருந்திணை பெறுமே’ என்றார் அவை சிறப்பில இவை சிறப்புடைய வென்றற்கு, இந் நான்கும் ஒருதலைக் காமம் பற்றி நிகழாமையானும் ஒருவனோடொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவ மன்மையானும் அவற்றின் வேறாகிய பெருந்திணையாம். வெள். இது பெருந்திணைப்பாற்படுவன இவையென்கிறது. (இ-ள்) : மேற் குறித்தவற்றுள் நோக்குவவெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க் கூறிய நான்கு நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும் வழி அன்பின் ஐந்திணை யாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும் வழிப் பெருந்திணைக்குரிய பொருந்தா நிலைகளாகவும் கொள்ளப்பெறும் எ-று.
கன் நிமித்தம் பன்னிரண்டும் யாவை யென்பது எல்லா ராலும் அறியப்பட்டதாகும் என்பது கருத்து. 1. அவ்விரண்டு-முன்னைய மூன்று (கைக்கிளை) பின்னர் நான்கு (பெருந்திணை). 2. கைக்கிளையின் பாற்படும். |