பக்கம் எண் :

களவியல் சூ. 16151

சிவ.

இச்சூத்திரம் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டனுள் பின்னர் உள்ள நான்கும் பெருந்திணைப் பாற்படும் என்கின்றது.

(இ-ள்) : பின்னர் உள்ள ஏறிய மடற்றிறம் முதலியவற்றின் நிமித்தங்கள் பெருந்திணைப்பாற் படுவனவாகும்.

ஏறிய மடற்றிறம் முதலிய நான்கும் தலைவன் தலைவிய ரிடையே ஒத்த அன்பால் நிகழ்வனவல்ல வாதலின் பெருந்திணைப் பாற்படுவனவாம்.

களவு ஐந்நிலத்துக்கும் உரியது

104. முதலொடு புணர்ந்த யாழோர் மேன
 தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே      (16)

ஆ. மொ.

இல.

The proper love, which is in the nature of the love of people having the lyre always with them will have the remaining five aspects.

இளம்.

என்-எனின், மேற் சொல்லப்பட்ட ஒருதலைக்காமமும் பொருந்தாக்காமமு மன்றி, ஒத்த அன்பின் வருங் கூட்டம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) : முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர்பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினையுடைய ஐந்து வகைப்படும் என்றவாறு.

முதலொடு புணர்ந்த என்றாரேனும் (வந்தது கண்டு வாராதது முடித்தல்’ (மரபியல் 112) என்பதனால் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம். இதனாற் சொல்லியது, ஒத்த காமமாகிக் கருப் பொருளோடும் புணர்ந்த கந்திருவநெறி1 இடவகையான் ஐந்து


1. கருப் பொருளொடும் புணர்ந்த கந்தருவ நெறி என்றது கருப்பொருள் கொண்டு பாடப்பட்ட செய்யுளை நோக்கியது.