வகைப்படும் என்றவாறு. அவையாவன; களவும், உடன்போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற்பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம். இச் சொல்லப்பட்ட பன்னிரு வகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங்கராயினார் நிமித்தமாக வேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்த காதலுள்வழிப் பாங்கராயினாரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப்பகுதியாகவும் ஒருதலை வேட்கையாகிய வழி இவரால் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகியவழிப் பெருந்திணையாகவும் கொள்க. ஐந்நிலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உளரா லெனின் ‘முதலொடு புணர்ந்த’ என்பதனால் நிலம் பெறுமாதலான்1 நிலம் என்பதற்கு ‘வேறு பொருள்’ உரைத்தல் வேண்டு மென்க. அஃது அற்றாக இற்கிழத்தி, காமக்கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியானாதல் வரையப்பட்டாராகப்2 பொருட் பெண்டிராகிய காதற் பரத்தையர் கூட்டம் ஒத்த காமமாகியவாறென்னையெனின் அரும் பொருளானாதல், அச்சத்தானாதல் அன்றி அன்பினாற் கூடுதலின் அதுவுங் கந்திருவப்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவாராயின் இவன் மாட்டுத் தலைமை இன்றாமென்பது உணர்ந்து கொள்க. 3 அஃதாமாறு “அன்னை; கடுஞ்சொல் அறியாதாய் போலநீ என்னைப் புலப்பது ஒறுக்குவேன் மன்யான் சிறுகாலை இற்கடை வந்து குறிசெய்த
1. முதலொடு புணர்ந்த யாழோர்மேன-முதற் பொருளொடு புணர்க்கப் பட்டனவாகிய கந்தர்வர்பாற்பட்ட செய்யுள்கள். முதல் என்பது நிலமும் காலமும். நிலமும் காலமும் கூறப்படுவன குறிஞ்சி முதலிய நிலங்கள். அதனால் முதலொடு புணர்ந்த என்ற அளவில் குறிஞ்சி முதலியன அடங்கும். 2. வரையப்பட்டாராக - தலைவனுக்குரியர் என்று வரை யறுக்கப்பட்டாராக. 3. அவ்வாறன்றி........இன்றாம் என்பது; அன்பினாற் கூடுதலின்றி அச்சத்தானாதல் பொருளானாதலாகிய பிறிது |