அவ்வழி என்றும் யான் காணேன் திரிதர எவ்வழிப் பட்டாய் சமனாக இவ்வெள்ளல்”1 (கலித்-97) எனவும் “கண்டேனின் மாயங் களவாதல்” என்னுங் கலியுள், “.....நோயும் வடுவுங் கரந்து மகிழ்செருக்கிப் பாடுபெயல் நின்ற பானாள் இரவில் தொடிபொலி தோளும் முலையுங் கதுப்பும் வடிவார் குழையும் இழையும் பொறையா ஒடிவது போலும் நுசுப்போ டடிதளரா வாராக் கவவின் ஒருத்திவந் தல்கல்தன் சீரார் நெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் போரார் கதவம் மிதித்த தமையுமோ”2 (கலித்-90) எனவும், பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும், காமக்கிழத்தியும் அன்மையும் அறிந்து கொள்க. இவ்வகை வருவன ஐந்து நிலனாய் வரும். அஃதேல், மருதக்கலியுள்,
நெறியால் ஆடவரைக் கூடுவராயின் அந் நிலையில் தலைவனிடம் கூடும் கூட்டத்தில் தலைவனுக்குத் தலைமையின்றாம் என்பது. 1. கருத்து; நீ செய்த குறியிடத்து நாளும் வந்து நின்னைக் காணாமல் யான் திரிய நீ எவ்விடம் சென்றாய் எனச் சிறுகாலையில் எம் வீட்டின் வாசலில் வந்து நின்னைக் கடுஞ்சொல் சொல்லிப் புலந்ததைப்பற்றி ஒன்றும் அறியாதாய் போல நடுநின்று என்னை இகழும் இகழ்ச்சிக்கு என்னையான் ஒறுத்துக் கொள்வதன்றி வேறு என் செய்வேன். நீ அப்படிப்பட்ட பரத்தன். 2. கருத்து: தானுற்ற காம நோயும் அதனால் எழுந்த அலரும் மறைத்து மகிழ்ச்சியைப் பெருக்கி, மழைபெய்த பாதியிரவில், தொடி, தோள், முலை, கூந்தல், அணியும் ஆகியவை பாரமாக அமையத் தளரும் இடையோடு அடி தளர்ந்து வந்து தழுவுதலோடு தங்குதலையுடைய ஒருத்தி தன் சிலம்பு சிலம்ப நின்கதவை மிதித்த செயல் அமையுமோ? |