“...............................” அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்” (கலித்-82) எனவும், ‘வழிமுறைத்தாய்’ எனவும் ‘புதியோள்’ எனவும் இவ்வாறு கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியுமென மனைவியர் நால்வருளர். அவரெல்லாரையும் கூறாது மனைக் கிழத்தியர் இருவர் என்றதனாற் பயன் இன்றெனின், அவரெல்லாரும் இற்கிழத்தியும், காமக்கிழத்தியுமென இரண்டு பகுப்பினுள் அடங்குப. அன்றியும், இவர் நால்வரொடு பரத்தையுட்பட ஐவர் கந்திருவப் பகுதியர் என உரைப்பினும் அமையும். ‘பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே” (பொருளியல்-28) என ஓதுதலானும், தலைவற்குப் பிரமம் முதலாக வரும் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் பரத்தையும் என ஐந்து வகைப் படுமென்பதூஉம் ஒன்றெனக் கொள்க. நச். இஃது அப்பன்னிரண்டனுள் இடையதாய் ஒழிந்த ஐந்துங் கூறுகின்றது. (இ-ள்) : முதலொடு புணர்ந்த யாழோர்மேன-மேற் கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்தி வரும் கந்தருவமார்க்கம் ஐந்தும், தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே-கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் என்றவாறு. எனவே, முதற் கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றோடு பொருத்தமுடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினார். இவை அப்பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும் முதலொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் ‘யாழோர் மேன’ என்றார். இவையும் கந்தருவமே என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர் நின்று உடம்படுத்த லொப்புமையுடைய. ‘கெடலருஞ் சிறப்பு’ எனவே முதல், கரு, உரிப் பொருளானுங் களவென்னுங் கைகோளானும் பாங்கி புணர்த்தலின்மையானும் இலக்கணங் குறைப்பட்டதேனுஞ் சுட்டியொருவர்ப் பெயர் |