கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்வாழ்க்கையும் பெற்று வருதற் சிறப்புடைய இவையும் ஐந்நிலம் பெறுதலேயன்றி யென்றானாம். இது புலனெறியன்றி உலகியலாகலின் உலகியலாற் பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளதாகலிற் பாலையும் கூறினான். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமும் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின்று என்றான். வெள். இஃது அன்பின் ஐந்திணைக்குச் சிறந்தன இவை என்கின்றது. (இ-ள்) : முதல் கரு உரியென்னும் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியையொத்த காமக் கூட்டம் வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை யிறத்தல் என்னும் கெடுதலில்லாத சிறப்பினையுடைய ஐந்து நிலைகளையும் தனக்குச் சிறந்த நிலைக்களன்களாகக் கொள்ளும், எ-று, தவல் அருஞ் சிறப்பு-கெடுதலில்லாத சிறப்பு; அருமை ஈண்டு இன்மை குறித்து நின்றது. சிவ. இச் சூத்திரம் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டனுள் இடை நின்ற ஐந்தும் அகன் ஐந்திணைப் பாற்படும் என்கின்றது. (இ-ள்) : முதல் கரு உரி எனும் மூன்று பொருள்களோடு சேர்ந்தனவும் யாழோர் கூட்டத்தின் பாற்படுவனவும் ஆன களவு கற்பு எனும் கைகோள் இரண்டன்பாலும் சாரும் இடை நின்ற ஐந்து கூட்டங்களும் கெடலரிய சிறப்பினையுடைய குறிஞ்சி முதலிய ஐந்து நிலங்களின் பாற்பட்டு அகவொழுக்கங்களாகும். உடன்போக்கு நிமித்தம் களவில் அடங்க களவின் முடிவாகிய வரைவும், ஊடல் நீக்கு நிமித்தமும் கற்பில் அடங்கும். இவை பற்றிய செய்யுள்கள் முதல் கரு உரிப் பொருள்களோடும் குறிஞ்சி முதலிய ஐந்நிலங்களுள் ஒன்றோடும் வரும். அப்படி வரச் செய்யும் செய்யுள்கள் அகத்திணைப் பாற்படும். இனிப் பாங்கா நிமித்தம் பன்னிரண்டு எனப் பாடங் கொண்ட வெள்ளைவாரணனார், தாம் கூறிய பன்னி |