ரண்டனுள் காட்சி ஐயம் துணிவு என்னும் முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பு எனக் கொண்டது பொருந்தும். ஆனால் நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க் கூறப்பட்ட நான்கும் பெருந்திணை பெறும் எனக் கூறியது பொருந்தாது. ஏன் எனின் அந்நான்கும் தலைவன் தலைவியர் இருவர் உள்ளத்திலும் பிறர் அறியாமல் நிகழ்வன ஆதலின் அகத்துக்கு உரியனவேயன்றி புறத்தைச் சார்ந்ததான பெருந்திணைக் குரியனவல்ல. வேட்கை முதல் நாணுவரை யிறத்தல் வரையுள்ள ஐந்தும் காமக் கூட்டம் சிறத்தற்குரியன என்பது பொருந்துமேனும் நாணுவரை யிறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் போலும் உணர்வுகளைப் போன்ற உணர்வே யாதலின் அதுவும் பெருந்திணைப்பாற் படுமேயன்றி அகவுணர்வின்பாற் படாது. ஆதலின் பாங்கன் நிமித்தம் முதல் இச்சூத்திரம் வரை வெள்ளைவாரணனார் உரை ஏற்புடைத்தாமோ எனின் ஆகாது என்க. தலைவன் தலைவி கூற்று 105. | இருவகைக் குறிபிழைப்பு ஆகிய இடத்தும் | | காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின் காட்சி ஆசையின் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்குஎதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும் தாளாண் எதிரும் பிரிவி னானும் நாணுநெஞ்சு அலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் வரைவு உடம்படுதலும் ஆங்கு அதன் புறத்தும் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோன் மேன என்மனார் புலவர் (17) |
|