ஆ. மொ. இல. If she fails to meet her lover in the two places fixed for meeting respectively in day and night, if the time is passing on without having the chance of meeting him, when wailing over the thought of seeing his signs which he might have left to indicate his arrival-for he would not leave the place without going there; at the act of accepting him as an un-invited guest, when he enters into the house in an un-expected time, at the act of welcoming him as a guest, at the time of departure for participating in the war, at the act of shedding the modesty which isannoying her, at the act of contradicting the words of ‘tholi’ in defending her lover when ‘tholi’ despises him for not having fixed the time for marriage, at the act of agreeing to the marriage and at the act of refusing the marriage other than one she expected-these are the circumstances where the expressions by lady-love take place-so say the poets. இளம். இது தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துங்காறும் கூறும் பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) : இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும் என்பது-பகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி இரவிற்குறி யென்பது எற்றாற் பெறுதுமெனின். “குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப” (களவியல்-140) என்பதனாற் கொள்க. அக் குறிக்கண் தலைவி வரவு பிழைத்த விடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு, “மழைவர வறியா மஞ்ஞை யாலும் அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி தானெம் மருளாள் ஆயினும் யாந்தன் உள்ளுபு மறந்தறி யேமே”1 (ஐங்குறு-298) இது, குறிபிழைத்த வழித் தோழிக்குச் சொல்லியது.
1. கருத்து: மழைவர வறிந்து மயிலாடும் மலைப் பக்கங் களையுடைய நல்லூரில் உள்ள கொடிச்சியானவள் |