பக்கம் எண் :

158தொல்காப்பியம்-உரைவளம்

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி
நல்லா ளாகுதல் அறிந்தாங்கு
அரியா ளாகுதல் அறியாதோயே1 (குறுந்-120)

இது குறி பிழைத்த வழி உள்ளத்திற்குச் சொல்லியது.

காணாவகையிற் பொழுது நனி இகப்பினும் என்பது - தலைமகளைக் காணாவகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு,

செய்யுள்:

“உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று
அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில்
ஆரம் நாறும் அறல்போற் கூந்தற்
பேரமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே” 2      (குறுந்-286)

எனவரும்.

தானகம்புகாஅன் பெயர்தல் இன்மையிற்....பொழுதினும் என்பது-காணாவகையிற் பொழுது மிகக் கழிந்துழிக் காட்சி யாசையினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி வேட்கையான் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு.

புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த வினையெச்சம்.3 செய்யுள் வந்த வழிக் காண்க.

புகாஅக்காலை புக்கெதிர்ப்பட்டுழிப்....கண்ணும் என்பது-தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம்புக்கெதிர்ப் பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதியனாகிய வழியும் கூற்று நிகழும் என்றவாறு.


நமக்கு இரங்காளாயினும் யாம் அவளை நினைந்து மறவாதுள்ளேம்.

1. கருத்து: பக்கம் 101-ல் காண்க.

2. கருத்து; பக்கம் 60-ல் காண்க.

3. புகான் - புக மாட்டான் - வினை முற்று. அது ‘புகானாய்’ என வினையெச்சப் பொருளில் வந்தது.