செய்யுள்: “இரண்டறி களவின்நம் காத லோனே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய்நீவி அமரா முகத்த ளாகித் தமரோர் அன்னள் வைகறை யானே” 1 (குறுந்-312) எனவரும். வேளாணெதிரும் விருப்பின் கண்ணும்-என்பது தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. அது குறிவழிக் கண்டு கூறுதல். அவ்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள்: “சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாயல் இன்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே”2 (ஐங்குறு-293) இது தலைவி கண்புதைத்த வழித் தலைவன் கூறியது. “குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர்
1. கருத்து பக்கம் 122-ல் காண்க. 2. கருத்து: மலையில் கமழும் காந்தள் குலை போலும் கைகளால் என் கண்களைப் புதைத்தவளே! உறக்கத்திற்கு இனிய துணைவியாகிப் பருத்த தோள்களையும் மயிலின் மாட்சியையும் உடைய மடந்தையே! என்நெஞ்சத்து அமர்ந்தவர் நீயல்லது வேறு உளரோ. இல்லை. |