பக்கம் எண் :

160தொல்காப்பியம்-உரைவளம்

உருவத் துருவின் நாள்மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச்சுர நீளிடை
நீநயந்து வருதல் எவனெனப் பலபுலந்து
அழுதனை உறையும் அம்மா அரிவை
பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதிர் இளவெயில் தோன்றி யன்னநின்
ஆய்நலம் உள்ளி வரினெமக்கு
ஏமம் ஆகும் மலைமுத லாறே” 1      (நற்றிணை-192)

எனவும் வரும்.

தாளாண் எதிரும் பிரிவினானும் என்பது - தாளாண்மை எதிரும் பிரிவின் கண்ணூம் என்றவாறு, எனவே நெட்டாறு சேறலன்றி அணிமைக்கண் பிரிவென்று கொள்க.

“இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீசு கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
காலியற் செலவின் மாலை யெய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மாண் ஆகம் அடைந்துவக் குவமே” 2      (குறுந்-189)

பிரிந்தவழிக் கூறியதற்குச் செய்யுள்:-

“ஓம்புமதி வாழியோ வாடை, பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் அருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி


1. கருத்து : பக்கம் 131-ல் காண்க.

2. கருத்து: தேர்ப்பாகனே! இன்றே சென்று நாளையே திரும்புவோம். மலையினின்றும் விழும் அருவியின் வேகம் போலத் தேரை விரைவு படுத்தி அதன் சக்கரம் விசும்பிலிருந்து வீசும் கொள்ளிகள் அழிப்பது போல் பயிர்களை அழிக்கக் காற்றின் வேகம் போல் வந்து மாலைப் பொழுதிலேயே மனையகம் வந்து அவளின் மார்பைத் தழுவி மகிழ்வோம்.