பக்கம் எண் :

களவியல் சூ. 17161

மரையினம் ஆரும் முன்றில்
புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே”

எனவும் வரும்.

நாணு நெஞ்சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது-நாணந் தலைவி நெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற் கண்ணும் என்றவாறு.

அஃது, அலராகும் என்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி இவ்வாறு கூறுகின்றது. புனைந்துரையென்றுக் கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம்.

“களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது”2      (குறள்-1045)

இது புனைந்துரையென்று கருதிக் கூறியது.

“உறாஅதோ ஊரறி கௌவை அதனைப்
பெருஅது பெற்றன்ன நீர்த்து”3       (குறள்-1143)

‘ஊரறிந்த கௌவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது பெற்ற நீர்மைத்தாகக் கொள்’ என்றமையானுந் தமர் வரைவுடன்படுவர் எனக் கூறியவாறாம்.

இது மெய்யாகக் கொண்டு கூறியது.

வரைதல் வேண்டி....புல்லிய எதிரும் என்பது-வரைந்து கோடல் வேண்டித் தோழியாற் சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த கிளவி பொருந்திய எதிர்ப்பாட்டுக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல்.


1. கருத்து: ஆயிழை! நின் வருத்தம் தவிர்க. வாழி. பாம்பின் தொங்கும் தோலை ஒக்கும் அருவி யொழுகும் மலையின் அணியது வாகும் நெல்லிக் காயை மானினம் உண்ணும் முற்றத்தையுடைய புல்லால் வேயப்பட்ட குடிசையையுடைய நல்லோள் ஊர்.

2. கருத்து: பக்கம் 134ல் காண்க.

3. கருத்து: வெளிப்படையாக அன்பிலாதவர் சொல்வது போல் சொன்னாலும் அகத்தே பகை யுணர்வில்லாதவர் சொல் அது என்பது விரைவில் உணரப்படும்.

தொ-11