“நல்லுரை இகந்து புல்லுரைத் தாஅய் பெயல் நீர்க்கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே” 1 (குறுந்-29) எனவரும். வரைவுடம்படுதலும்-தோழி கூறிய சொற் கேட்டு வரைவுடம் படுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. “ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பின் சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை பரிந்தனென் அல்லனோ இறையிறை யோனே” 2 (குறுந்-52) எனவரும். ஆங்கதன் புறத்தும் என்பது-அவ்வரைவு நிகழ்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் வந்த வழிக் காண்க. புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ என்பது-குற்றம் பட வந்த மறுத்தலொடு கூட என்றவாறு. அஃது அவர் மறுத்தற் கண்ணுந் தலைமகன் மாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு அதற்குச் செய்யுள்: “பொன்அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையுள் திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
1. கருத்து: பக்கம் 124ல் காண்க. 2. கருத்து: கூந்தலையும் வெண்பல்லையும் உடையவளே! நீ மலையுறை தெய்வத்தால் வருத்தமுற்றவள்போல் நடுங்குவதைப் பார்த்து யானும் சிறிது சிறிதாக இரங்கி வருந்தினேன் அல்லனோ. |