பக்கம் எண் :

களவியல் சூ. 115

யரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல்
பிரித லில்லாப் பிரசா பத்தியம்”

ஆரிடமாவது: தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப்பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவை போற் பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது;

“தனக்கொத்த வொண்பொருடன் மகளைச் சேர்த்தி
மனைக்கொத்த மாண்புடையாற் பேணி-யினக்கொத்த
ஈரிடத் தாவை நிறீஇயிடையீவதே
ஆரிடத்தார் கண்டமண மாம்”,

தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித் தீமுன்னர்த் தக்கிணையாகக் கொடுப்பது.

“நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த
வேள்வி விளங்கழன் முன்னிறீஇக்-கேள்வியாற்
கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே
தெய்வ மணத்தார் திறம்”

ஆசுரமாவது:- கொல்லேறு கோடல் திரிபன்றியெய்தல் வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல்:

“முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத்
தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனி
னிவையிவை செய்தாற் கெளியண் மற்றிவளெனத்
தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித்
தன்னவை யாற்றிய வளவையிற்றயங்க
றொன்னிலை யசுரந் துணிந்த வாறே”.

இராக்கதமாவது: தலைமகடன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது.

“மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர்
வலிதிற்கொண் டாள்வதே யென்ப-வலிதிற்
பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ
ளிராக்கதத்தார் மன்ற லியல்பு”.