பக்கம் எண் :

166தொல்காப்பியம்-உரைவளம்

என்றது, தாய் துஞ்சாமை ஊர் துஞ்சாமை காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல் நாய் துஞ்சாமை போல்வனவற்றால் தலைவன் குறியின்கண் தலைவி வரப் பெறாமல்1 நீட்டித்தலாம்.

(உ-ம்)

“இரும்பிழி மாரி அழுங்கல் மூதூர்
விழவின் றாயினுந் துஞ்சா தாகு
மல்ல லாவண மறுகுடன் மடியின்
வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள்
பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற்
றுஞ்சாக் கண்ணர் காவலர் சடுகுவர்
இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்
அரவவாய் ஞமலி குரையாது மடியிற்
பகலுரு வுறழ நிலவுக்கான்று விசும்பி
னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே
திங்கள் கல்சேர்பு கனையிருண் மடியி
னில்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும்
வளைக்கட் சேவல் வாளாது மடியின்
மனைச்செறி கோழி மாண்குர லியம்பு
மெல்லா மடிந்த காலத் தொருநாள்
நில்லா நெஞ்சத் தவர் வாரலரே
யதனால், அரிபெய் புட்டிலார்ப்பப் பரிசிறந்
தாதி போகிய பாய்பரி நன்மா
நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றாற் றோழிநங் களவே” 2      (அகம்-122)


1. தலைவனைக் குறியின்கண் தலைவி வரப் பெறாமல் என்க.

2. கருத்து: தோழீ! நம் களவொழுக்கமானது தித்தனது உறையூர்ப் புறங்காடு போலப் பல தடைகளையுடை