“கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே” 1 (குறுந்-47) “வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி லெழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தி லெழாதாய்க் குறாஅலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்”2 (யா.வி.சூ. 87 மேற்கோள்) இதுவுமது. தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி ஆசையிற் களம் புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்-அங்ஙனங் காணா வகையிற் பொழுது நனி யிகந்து தலைவி குறி தப்பியக்காலுந் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரானென்பது தான் அறியுமாதலின் ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஒரு குறிசெய்தன்றி வாளாது பெயரானன்றே? அக்குறி காணுங் காட்சி விருப்பினாற் றலைவி பிற்றை ஞான்று விடியலிற் சென்று ஆண்டைக் குறிகண்டு கலங்கி அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்வதறியாது மயக்கத்தோடு கையறவு எய்தும் பொழுதின் கண்ணும்.
யது. அத்தடைகளாவன: ஊர்துஞ்சாது; ஊர் துஞ்சின் தாய் துஞ்சாள்; அவள் துஞ்சின் ஊர்க் காவலர் விரைகுவர்; அவர் துஞ்சின் நாய்கள் குரைக்கும்; அவை துஞ்சின் நிலவு எழும்; நிலவு மறையின் கூகை குழறும்; கூகை மடியின் கோழி கூவும்; எல்லாம் அடங்கியபோது அவர் குறியிடம் வருதலிலர்-தலைவி கூற்று. 1. கருத்து: நெடிய காலம் தங்கும் வெண்ணிலவே! யாங் கொள்ளும் களவொழுக்கத்துக் கிடையூறாக இரவிலே வேங்கை மலர் வீழ்ந்துள்ள பாறைகள் புலிபோலத் தோற்றமளிக்கும் காட்டிடத்து வருதலின் நீ நல்லவன் இல்லை. 2. கருத்து: வேங்கைப் புலி நடமாடும் சிறுநெறியில் என் கேள்வன் வரும் போது வெண் திங்களே! நீ எழுந்து ஒளி தராதே. அப்படி எழாத நின்னை நீண்ட நாகத்தின் பற்கள் உறாதனவாகுக. |